பிபாஷா பாசுவுடன் நைட் பார்ட்டியில் மாதவன்

பாலிவுட் ஹீரோயின் பிபாஷா பாசுவுடன் நைட் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார் மாதவன்.
வேட்டை படத்துக்கு பிறகு தமிழ் படத்தில் தலைட்டாமல் பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார் மாதவன்.
இதனைத் தொடர்ந்து நைட் ஆப் த லிவிங் டெட் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்ட மாதவன் தற்போது அந்த கதாபாத்திரத்துக்காக தாடி வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த நைட் பார்ட்டியில் பிபாஷா பாசுடன் கலந்துகொண்டார்.
பார்ட்டியை கொண்டாடிய குஷிக்கு பிறது தனது டுவிட்டரில், நேற்று இரவு அருமையான பார்ட்டியில் பங்கேற்றேன்.
அதில் அமிதாப்பச்சன், ஆமிர்கான், பிபாஷா பாசுவுடன் பேசி அரட்டையடித்தபோது நேரம் போனதே தெரியவில்லை என்றும் இதுவொரு குடும்ப பாங்கான சந்திப்பு, இந்த சந்திப்பை மீண்டும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

0 comments "பிபாஷா பாசுவுடன் நைட் பார்ட்டியில் மாதவன்", Baca atau Masukkan Komentar

Post a Comment

Facebook